fbpx

தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ. 38,480 விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

அந்த வகையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த முதலே தொடர்ந்து தங்கம் விலை கடுமையாக உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ. ரூ.4810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ. 38,480 விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து குறைந்து ரூ.64க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,000-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

கண்மாயை குத்தகைக்கு எடுப்பதில் கடும் போட்டி..! தேர்தல் நடத்தி பிரச்சனையை முடித்து வைத்த அதிகாரிகள்..!

Mon Jul 4 , 2022
திருமங்கலம் அருகே கண்மாயை குத்தகைக்கு எடுப்பதில் ஏற்பட்ட கடும் போட்டியால் தேர்தல் நடத்தப்பட்ட ருசிகர சம்பவம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நிலையூர் கண்மாய் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாயில் வளர்க்கப்படும் மீன்களை கூட்டுறவுச்சங்கம் மூலம் ஆண்டுதோறும் உள்ளூர் மக்களுக்கு ஏலம் விட்டு மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கண்மாயை குத்தகைக்கு விடுவதற்கான ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. இதனால், […]

You May Like