fbpx

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, 45,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்றும் சவரனுக்கு உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,705 ரூபாயாகவும், ஒரு சவரன் 45,640 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் 5,730 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் 45,840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி 79.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி 79,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வரும் நாட்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கக் கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Chella

Next Post

கல்யாண வீட்டை கதிகலங்க வைத்த ரசகுல்லா..!! 6 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! பெரும் பரபரப்பு..!!

Tue Nov 21 , 2023
ஆக்ரா அருகே திருமண நிகழ்ச்சியில் ரசகுல்லா தட்டுப்பாட்டால் ஏற்பட்ட அடிதடியில் 6 பேர் காயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே ஷம்சாபாத் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது. இது தொடர்பாக ஷம்சாபாத் காவல்துறையினர் கூறுகையில், ”கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிஜ்பன் குஷ்வாகா பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரசகுல்லா தட்டுப்பாடாக […]

You May Like