கர்நாடகா பால் கூட்டமைப்பு, அரசுக்கு சொந்தமான நந்தினி பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. மேலும், பாக்கெட்டில் உள்ள பால் அளவும் அதிகரித்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது நந்தினி பிராண்ட்களின் பொருட்கள். நந்தினி பாலின் விலை 500 மில்லி லிட்டர் 22 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பால் 42 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளதாக கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (KFM) அறிவித்துள்ளது. அதேசமயம் ஒவ்வொரு பால் பாக்கெட்டிலும் 50 மில்லிலிட்டர் கூடுதலாக பால் சேர்க்கப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. KMF கடைசியாக ஜூலை 2023 இல் நந்தினி பால் விலையை உயர்த்தியது, இது ஒரு வருடத்திற்குள் இரண்டாவது விலை உயர்வு ஆகும். கர்நாடகாவில் நந்தினி பாலின் விலை முன்பு லிட்டருக்கு ரூ.42 ஆக இருந்த விலை இப்போது ரூ.44 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (KFM) தலைவர் பீமா நாயக் கூறுகையில், கட்டணங்களை மாற்றியமைக்கும் கூட்டமைப்பின் முடிவு குறித்து அவர் தெரிவித்தார். கர்நாடகாவில் நந்தினி பாலின் விலை முன்பு லிட்டருக்கு ரூ.42 ஆக இருந்த விலை இப்போது ரூ.44 ஆக உயர்ந்துள்ளது. பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நுகர்வோர் ஒவ்வொரு 500 மில்லி மற்றும் 1,000 மில்லி பாக்கெட்டுகளுக்கும் 50 மில்லி கூடுதலாகப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
Read More: EPFO மகிழ்ச்சி செய்தி… வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு… விரைவில் வங்கி கணக்கில் பணம் கிரெடிட்…