fbpx

கவனம்.. 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இனி இது கிடையாது…! அனைத்தையும் ரத்து செய்து அரசு திடீர் உத்தரவு…!

10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள ஆணையில்;  பள்ளிக்கல்வித்துறையில் பொதுத் தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு 2011-ம் ஆண்டு முதல் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் முதலமைச்சர், செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.

மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை தரும் மனதாரர்களுக்கு பதிவுகள் மேற்கொண்டு பதிவேட்டை வழங்க வேண்டும். மேலும் 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் www.tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்துகொள்ளலாம். வேலைவாய்ப்பு பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை இ-சேவை மையங்களிலும் மேற்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு நீண்டதூரம் சென்று காத்திருந்து பதிவு செய்வதில் ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில் வேலை வாய்ப்பு பதிவு செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

10,12 ம் வகுப்பில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து.

Also Read: தமிழக அரசு சார்பில் படித்து வேலை இல்லாதவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Vignesh

Next Post

தமிழக அரசு அறிவித்த மாதம் தோரும் ரூ.1,000 உதவித்தொகை...! இன்று மாலைக்குள் இதை செய்யவில்லை என்றால் கிடையாது...!

Sun Jul 10 , 2022
தமிழக அரசு அறிவித்த மாணவியர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன் நிறைவடைகிறது. இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் மாணவியர்களின் விபரங்களை ஜூன் 30-ம் தேதி வரையில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர், இதற்கான காலக்கெடு ஜூலை 10-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. 2021-22 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவியர்களும் https://penkalvi.tn.gov.in/ என்ற […]

You May Like