fbpx

”களத்தூர் கண்ணம்மா” படத்தில் கமலை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார்..!! உருக்கமான பதிவு..!! திரையுலகினர் இரங்கல்..!!

சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அருண் வீரப்பன், வயது முதிர்வு காரணமாக காலமானார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட தயாரிப்பில் அனுபவம் கொண்ட இவர், ஏவிஎம், ஜெமினி ஸ்டூடியோக்களில் பல்வேறு தமிழ் மற்றும் இந்தி படங்களுக்காக பணியாற்றியுள்ளார்.

அருண் வீரப்பன், கியூப் சினிமா நிறுவனத்தின் தலைவராக இருந்தவர். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தபோது “களத்தூர் கண்ணம்மா” திரைப்படத்தின் மூலம், உலகநாயகன் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியவர் இவர்தான். உன்னிடத்தில் நான் என்ற திரைப்படத்தையும், 150 குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த அருண் வீரப்பன், 10 நாட்களுக்கு முன்பு தவறி விழுந்து காயமடைந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு காலமானார். இவருக்கு மறைவுக்கு பல்வேறு திரைபிரலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன். நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்குத் தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

திடீர் முடிவு..!! நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் ரஜினி..? சகோதரர் சத்யநாராயண ராவ் சொன்ன சூசக பதில்..!!

Mon Aug 28 , 2023
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவு தர போகிறார் என்பது குறித்து அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் நெல்சனுக்கு மாபெரும் வெற்றிப்படம் என்றுதான் சொல்ல வேண்டும். கோலமாவு […]

You May Like