பொதுவாக சினிமா பிரபலங்கள் திரையரங்குக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து தங்களுடைய திரைப்படத்தை பார்ப்பதில்லை என்றே பெரும்பாலும் சொல்லப்படும்.
ஆனால் நடிகர் விஜய் அப்படியல்ல, நடிகர் விஜய் பல சமயங்களில் தன்னுடைய ரசிகர்களுக்கே தெரியாமல் அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்து இருக்கிறார்.
சென்னை காசிமேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் பலமுறை அவருடைய திரைப்படங்களை அவர் ரசிகர்களுக்கே தெரியாமல் அவர்களுடன் அமர்ந்து பார்த்து இருக்கிறார் என்று அந்த திரையரங்கின் உரிமையாளரே ஒரு முறை சொல்லி இருக்கிறார்.
அந்த வகையில், இன்று விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு திரைப்படமும் ஒரே நாளில் திரைக்கு வந்திருக்கிறது. இந்த திரைப்படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக துணிவு திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. இந்த நிலையில், வாரிசு திரைப்படத்தை காண்பதற்காக நடிகை திரிஷா ஒரு பிரபல திரையரங்குக்கு தன்னுடைய தோழிகளுடன் வந்திருக்கிறார்.
இந்த நிலையில், திரையரங்கில் வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடல் ஒளிபரப்பாகி கொண்டிருந்தபோது, ரசிகர்கள் பின்னால் திரும்பி கடைசி வரிசையில் அமர்ந்திருந்த திரிஷாவை தான் பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.
ஆனால் அப்போது ரசிகர்களை கவனித்த திரிஷா அவர்களை பார்த்து சைகையில் திரையை பாருங்கள் என்னை பார்க்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.