நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகனின் செல்போனை ஆராய்ந்தாலே சீமான் என்னுடன் பேசியது வெளிச்சத்துக்கு வரும் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொண்டு தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பாக தன்னால் போராட முடியவில்லை என கூறி வாபஸ் பெற்றுவிட்டார். இருந்தாலும் சீமானுக்கு ஏற்கெனவே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய நிலையில் தன் மனைவி கயல்விழியுடன் சீமான் இன்று ஆஜரானார்.
இந்நிலையில், விஜயலட்சுமி கூறுகையில், சீமான் மீது நான் கூறிய புகார்களை நிரூபிப்பேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் புகார்களை வேண்டுமானால் என்னால் நிரூபிக்க முடியாமல் போகலாம். ஆனால், மற்ற விஷயங்களை எல்லாம் என்னால் நிரூபிக்க முடியும். வீரலட்சுமியின் வீட்டிலிருந்து நான் வெளியேறிய போது சாட்டை துரைமுருகனிடம் பேசினேன்.
அப்போது அவர் தான் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியனை அனுப்பி வைத்தார். நான் இரு நாட்கள் டைம் கேட்டேன். ஆனால், அவர் இரவோடு இரவாக போக வேண்டும் என கூறினார். புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு அக்காவுடன் ஊருக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தவரே சாட்டை துரைமுருகன்தான். என் வங்கிக் கணக்கில் ரூ.50,000 போட்டிருந்தார்கள். என்னையும் அக்காவையும் பெங்களூருக்கு அனுப்பி வைத்ததே சாட்டை துரைமுருகன்தான்.
அவருடைய போனை ஆய்வு செய்தாலே, சீமான் என்னுடன் பேசியது தெரியும். நான் சாட்டையுடன் நடத்திய மெசேஜ்களை எல்லாம் வைத்திருக்கிறேன். தேவைப்பட்டால் போலீஸிடம் காட்டுவேன். என் மீது சீமான் மான நஷ்ட ஈடு வழக்கு போடுவதாக சொல்கிறார். அப்படி போட்டாலும் நான் ஆதாரத்தை காட்டுவேன். என்னை பொய் சொல்லும் பெண்ணாக சித்தரித்தால் இந்த மோதல் முடிவுக்கே வராது” என விஜயலட்சுமி எச்சரித்தார்.