fbpx

பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் தர மறுத்த கடைக்கு சீல்.. மாவட்ட நிர்வாகம் அதிரடி..

பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன காலக்கட்டத்தில் தீண்டாமை ஒழிந்துவிட்டதாக நாம் நினைத்தால் அது தவறு.. அதுவும் பெரியார் மண் என்று கூறிக் கொள்ளும் தமிழகத்தில் தீண்டாமை கொடுமை சம்பவம் அரங்கேறி உள்ளது.. தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் மறுக்கப்பட்டுள்ளது.. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம். இனி பொருட்கள் தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் என கடை உரிமையாளர் கூறுகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ராமச்சந்திர மூர்த்தி என்ற நபரை கரிவலம்வந்த நல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர் பெட்டிக்கடைக்கு சீல் வைத்தனர்.

Maha

Next Post

3-வது ஏசி எகானமி வகுப்பு பயணிகளுக்கும் இனி இந்த வசதி கிடைக்கும்... இந்திய ரயில்வே அறிவிப்பு...

Sat Sep 17 , 2022
மூன்றாவது ஏசி எகானமி வகுப்பு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வைகளை வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்திய ரயில்வே பல ரயில்களில் குறைந்த கட்டணத்தில் மூன்றாவது ஏசி எகானமி வகுப்பு பெட்டிகளையும் அதிகரித்துள்ளது. இந்த பெட்டிகளின் கட்டணம் சாதாரண மூன்றாம் ஏசி வகுப்பை விட குறைவாக இருக்கும். எனினும் மூன்றாவது ஏசி எகானமி வகுப்பு பெட்டிகளுக்கு இந்த சேவை கிடைக்கவில்லை. இந்நிலையில் மூன்றாவது ஏசி எகானமி வகுப்பு பெட்டிகளில் […]

You May Like