17 வயது சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சிப் பிரமுகரின் மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் பகதூர்புராவைச் சேர்ந்தவர் மிர் இனாயத் அலி பக்ரி. இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிஆர்எஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இவரது மகன் ரிஸ்வான் பக்கிரி (22). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாகச் சொல்லியும் திருமண ஆசை காட்டியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஒருகட்டத்தில், பக்ரியின் சுயரூபம் தெரிந்து போனதால் இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார் அந்தச் சிறுமி. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், பக்கிரி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் பக்கிரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், தலைமறைவாகி இருக்கும் ரிஸ்வான் பக்கிரியையும் வலைவீசி தேடி வருகின்றனர்.