சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது மக்கள் பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது..
கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. மேலும் சராசரியாக 4 மாதங்களுக்கு ஒருமுறை கொரோனாவின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருகிறது.
இந்த சூழலில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக16,561 கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன, மேலும் கோவிட் நேர்மறை விகிதம் 5.44% ஆக உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.. குறிப்பாக டெல்லியில், புதிதாக 2,726 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.. இது கிட்டத்தட்ட ஏழு மாதங்களில் மிக அதிகமாக உள்ளது என்று சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 14.38 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பெரியளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் தொற்றுநோயைத் தவிர்க்க மாஸ்க் அணியவும், சமூக தூரத்தை பராமரிக்கவும், கைகளை சுத்தப்படுத்தவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே பல மாநிலங்கள் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளன.. அந்த வகையில் டெல்லியில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது..