ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கி இருக்கும் நிலையில், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக – காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை பெற இரு கட்சிகளும் கடுமையாக போராடி வரும் நிலையில், ஒரு காலத்தில் கிங்மேக்கர் ஆக மாநிலத்தில் அறியப்பட்ட ஜனநாயக ஜனதா கட்சி பரிதாபமான நிலையில் உள்ளது.
ஹரியானாவை பொருத்தவரை மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகளும், சில மாநில கட்சிகளும் களம் கண்டன. தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக – காங்கிரஸ் கட்சிகள் சம பலத்தில் இருக்கின்றன. மாநில கட்சிகள் தோல்வி முகத்தை நோக்கியே பயணித்து வருகிறது. கடந்த 2019 தேர்தலில் பாஜக 40 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் காங்கிரஸ் 30 இடங்களில் வென்றது.
அப்போது ஹரியானாவின் மாநில கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவது யார் என்பதை உறுதி செய்யும் இடத்தில் இருந்தது. அப்போது பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், அதோடு கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராக ஜேசிபி கட்சி தலைவர் சவுதலாவும் நியமிக்கப்பட்டார். 4 ஆண்டுகள் ஆட்சி நடந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
10 மக்களவைத் தொகுதிகளில் பாஜக, ஜேசிபி கட்சிக்கு ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முன் வந்தது. ஆனால், இரு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கையோடு அக்கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது. தொடர்ந்து பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்ட போது, சுயேட்சைகளின் ஆதரவோடு ஆட்சி தக்க வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போதைய தேர்தலில் ஆம் ஆத்மி தனியாக களமிறங்கியது. பாஜகவும் தனித்துப் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் இந்தியா கூட்டணி உடனும், ஜனநாயக ஜனதா கட்சி ஆசாத் சமாஜ் கட்சி உடனும், இந்திய தேசிய லோக் தளமும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தனர்.
கிட்டத்தட்ட 86 தொகுதிகளில் காங்கிரஸ் பாஜக கூட்டணியை முன்னிலையில் இருக்கிறது. கடந்த ஆட்சியில் கிங் மேக்கராக இருந்த ஜேசிபி தற்போது ஒன்று இரண்டு எம்எல்ஏக்களை கைப்பற்றவே கடுமையாக போராடி வருகிறது. இந்த தேர்தலில் களம் கண்ட ஆம் ஆத்மி எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை ஹரியானாவிலும் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் இதர கட்சிகளின் ஆதரவும் சுயேட்சை எம்எல்ஏக்களின் தாக்கமும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
Read More : உங்களுக்கு இந்த வகையில் பணம் கிடைத்தால் என்ன அர்த்தம்..? ஆன்மீகம் சொல்வது என்ன..?