fbpx

கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கல்லூரியை சூறையாடிய மாணவர்கள்….! கல்லூரி நிர்வாகம் எடுத்த அதிரடி ஆக்சன் கொந்தளிப்பில் மாணவிகள்….!

தற்போதைய காலகட்டத்தில், பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும் சரி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்குவது வழக்கமாகி வருகிறது.

படிப்பதற்காக, ஆசிரியர்களை நம்பி செல்லும் மாணவிகளை, பாலியல் தொல்லை வழங்கி, அவர்களை துன்புறுத்தும் விதமாக ஆசிரியர்கள் நடந்து கொள்வது வேதனைக்குரிய விஷயமா உள்ளது.

அந்த வகையில், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த கௌரவ விரிவுரையாளருக்கு தர்ம அடி கொடுத்த 16 மாணவர்களை, இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தின் மீது மாணவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

அதாவது, திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள, குமுலூர் ஊராட்சியில், அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக தெரிவித்து, அந்த கல்லூரியின் கவுரவ விரிவுரையாளரான வினோத்குமாரை, 16 மாணவர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும், அந்த மாணவர்கள் 16 பேரையும் இடை நீக்கம் செய்து, கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

அதாவது, விரிவுரையாளர் வினோத்குமாரை தாக்கியபோது, கல்லூரியில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியதின் காரணமாக, அந்த மாணவர்கள் 16 பேரையும் இடைநீக்கம் செய்து கல்லூரியின் முதல்வர் மாரியம்மாள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதன் காரணமாக, மாணவிகள் அனைவரும் கடும் கொந்தளிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

Next Post

என்னது சிறுநீரக நோயை முன்னாடியே தெரிஞ்சிக்கலாமா…? அது எப்படி….?

Sun Sep 10 , 2023
மனிதனுக்கு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே முக்கியமானது தான். அதில் சிறுநீரகமும் ஒன்று. அதோடு, சிறுநீரகம் மனிதனுக்கு மிக முக்கிய உறுப்பு என்றும் கூறப்படுகிறது. ரத்தத்தை வடிகட்டி, செரிமான அமைப்பிலிருந்து வெளியிடப்படும் கழிவுகள் அதிக அளவிலான திரவங்களை வெளியேற்றுவதற்கான உறுப்பாக சிறுநீரகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதயம் குறித்த நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற நோய்களைப் போல சிறுநீரக தொற்றும் மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. சிறுநீரின் நிறம் […]

You May Like