முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைகால தடை விதித்துள்ளது..
2001 முதல் 2006 வரை வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, ஓ.பன்னீர்செல்வம், அவரது தம்பி ஓ.ராஜா, மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் மீது 2006-ஆம் ஆண்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
ஆனால், அடுத்த அதிமுக ஆட்சி காலத்தில் 2012-ஆம் ஆண்டு, ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட சிவகங்கை நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக, தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதித்த சிவகங்கை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.
எம்பி, எல்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, நாள்தோறும் விசாரணை நடத்தி, அடுத்த ஆண்டு ஜூன் 31-ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் ஆணையிட்டுள்ளார். ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read more ; வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிடுங்க.. உடலில் என்னென்ன மேஜிக் நடக்கும்னு பாருங்க..