fbpx

தமிழகமே… இதற்கான செலவின தொகை ரூ.1,000 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி அறிவிப்பு…! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை…!

கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கு செலவின வரம்பினை ரூ.1,000 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது;  கிராம சபையினை நடத்த, கிராம ஊராட்சியின் அனுமதியின்படி, ஊராட்சி நிதியிலிருந்து, அதிகபட்சமாக ரூ.1000 செலவு செய்ய கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதியிருந்தது. 2022-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது. கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கான செலவினங்களை ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் அதிகபட்சமாக ரூ.1000  மட்டும் செலவினம் மேற்கொள்ள ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 14 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தத்தொகை போதுமானதாக இல்லை என்பதால், அதனை ரூ.5000ஆக உயர்த்தி கிராம சபை அல்லது சிறப்பு கிராம சபை நடைபெறும் நாட்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சிப் பொது நிதியில் மேற்கொள்ள உரிய அரசாணை வழங்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் அரசினைக் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் கருத்தை அரசு கவனமாக பரிசீலனை செய்தது. அதன் அடிப்படையில், கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவதற்கான செலவினம் ரூ.1000-லிருந்து ரூ.5000-ஆக உயர்த்தி தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கிராம சபை அல்லது சிறப்பு கிராம சபை நடைபெறும் நாட்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சிப் பொது நிதியிலிருந்து ஒப்பளிக்கப்பட்ட இச்செலவினத்தை மேற்கொள்ள ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கி ஆணையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஜூலை 18 முதல் அமலுக்கு வந்த பேக் செய்யப்பட்டு பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் எவை…?

Vignesh

Next Post

"ஹாப்பி நியூஸ்" வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு... 2024 வரை FAME-II திட்டத்தின் மின்சார வாகனம் வாங்கினால் ரூ.15,000 ஊக்கத்தொகை...!

Wed Jul 20 , 2022
நாடு முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 68 நகரங்களில் FAME-II திட்டத்தின் கீழ் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுள்ளது கனரகத் தொழில்துறை அமைச்சகம் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த  68 நகரங்களில் 2,877 மின்சார வாகன திறனேற்றல்  நிலையங்களுக்கு FAME இரண்டாம் கட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் […]

You May Like