fbpx

விறுவிறுப்பாக நடைபெறும் ஜம்மு காஷ்மீர் இறுதி கட்ட தேர்தல்..!! – பிரதமர் மோடி போட்ட முக்கிய பதிவு

90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணி அளவில் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இத்தேர்தலுக்காக தேர்தல் நடைபெறும் 7 மாவட்டங்களில் ராணுவம், சிஆர்பிஎப், பிஎஸ்எப், இந்தோ- திபெத்திய எல்லை காவல்துறை உள்ளிட்டவை காஷ்மீர் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. எல்லைகளிலும் தீவிரவாத ஊடுருவல் முயற்சிகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, 20 லட்சத்து 9 ஆயிரத்து 33 ஆண் வாக்காளர்கள், 19 லட்சத்து 9 ஆயிரத்து 130 பெண் வாக்காளர்கள் மற்றும் 57 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் முதல்முறை வாக்காளர்கள், 35 ஆயிரத்து 860 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட 32 ஆயிரத்து 953 மூத்த குடிமக்கள் வாக்களிக்கின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் மூன்றாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஜனநாயகத்தின் திருவிழாவை வெற்றிபெறச் செய்ய அனைத்து வாக்காளர்களும் முன்வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் நண்பர்கள், பெண்கள் வாக்களிப்பில் பங்கேற்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more ; சீனா ஓபன் டென்னிஸ்!. உலகின் NO.1 வீரர் ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

English Summary

The third and final round of voting for the Jammu and Kashmir assembly elections will take place today.

Next Post

இனி பணம் எடுக்க வங்கியில் காத்திருக்க வேண்டாம்..!! ரேஷன் கடைகளிலே எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

Tue Oct 1 , 2024
The Tamil Nadu government is planning to implement a new scheme to provide banking services to the people along with ration shops in Tamil Nadu.

You May Like