fbpx

ரயில் தடம்புரண்டு கோர விபத்து!… 5 பேர் பலி! 70 பேர் படுகாயம்!… பீகாரில் பயங்கரம்!

பிகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளனர்.

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் சென்று கொண்டிருந்த 23 ரயில் பெட்டிகள் கொண்ட வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் நேற்று (அக். 11) இரவு 09.35 மணி அளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடைபெற்றுள்ள பக்சர் மாவட்டத்தின் ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள பகுதியில் மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தடம் புரண்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்.

இந்த விபத்து தொடர்பாக அவசரத் தொடர்புக்கு வடக்கு ரயில்வே ஹெல்ப்லைன் எண்களைப் பகிர்ந்துள்ளது. ஹெல்ப்லைன் எண்கள்: PNBE – 97714 49971, DNR – 89056 97493, ARA – 83061 82542, COML CNL – 77590 70004 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ரயில் தடம்புரண்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு விரைவில் அனுப்புமாறும் பக்சர் மற்றும் அர்ரா உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இந்த ரயில்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மீட்பு பணிகள் முடிவடைந்துவிட்டன என்று கூறினார்.மேலும் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Kokila

Next Post

’பட்டாசு ஆலைகள் மீது பாயும் நடவடிக்கை’..!! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

Thu Oct 12 , 2023
பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். அண்மை காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகளிலும், ஆலைகளில் திடீர் தீ விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. அந்த வகையில், கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில், பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு, 15 […]

You May Like