fbpx

தமிழகமே…! திட்டமிட்டபடி இன்று போக்குவரத்து வேலை நிறுத்த போராட்டம்…!

திட்டமிட்டபடி இன்று போக்குவரத்து வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.

போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.

மேலும் ஓய்வூதியர்களின் பஞ்சப்படி நிலுவையை வழங்க வேண்டும் என 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று பேச்சு வார்த்தை நடந்தது.

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய சவுந்தரராஜன்; கோரிக்கைகள் எதையும் இப்போது ஏற்க இயலாது. பொங்கலுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று அரசுத் தரப்பில் பதில் அளித்துள்ளனர். ஓய்வுபெற்ற 96 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே, திட்டமிட்டபடி இன்று வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

தை பிறக்க போகுது, இந்த ராசிக்காரர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்.!?

Tue Jan 9 , 2024
“தை பிறந்தால் வழி பிறக்கும்”  என்ற பழமொழியை அனைவரும் அறிந்திருப்போம். தை மாதத்தில் எந்தெந்த ராசியினருக்கு செல்வமும், பதவி உயர்வும், கௌரவமும் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம். மேஷம்1. ஆரம்பிக்கப் போகும் காரியங்களில் கட்டாயமாக வெற்றி நிச்சயம்.2. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.3. விரைவில் திருமணம் நடைபெறும். ரிஷபம்1. சுபச் செலவுகள் ஏற்படும்.2. அலைச்சல் அதிகமாக இருக்கும்.3. எந்த காரியத்தை தொடங்கினாலும் பொறுமையாக இருக்க வேண்டும். மிதுனம்1. நினைத்த செயல்களை செய்து […]

You May Like