fbpx

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத கடும் சரிவு..!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

அதுமட்டுமின்றி முதலீடுகளைப் பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு குறைந்து வருகிறது. இன்று காலையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 270 புள்ளிகள் குறைந்து 59,186 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 65 புள்ளிகள் குறைந்து 17,653 ஆகவும் வர்த்தகம் நடந்து வருகிறது. இந்நிலையில், பெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகித உயர்வை அறிவித்த பிறகு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெடரல் ரிசர்வ் வங்கி 75 பிபிஎஸ் வட்டியை உயர்தியது.

இதனால் வட்டி விகிதத்தை 3% இலிருந்து 3.25% க்கு உயர்த்தியுள்ளது. வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, இந்திய ரூபாய் சரிந்து இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு 80.46 ஆக குறைந்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்து இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. நாணயம் அதன் முந்தைய நாள் முடிவில் 80.28 ஆக இருந்ததை விட 0.4% குறைவாக உள்ளது. இதற்கு முன், ஆக., 29-ல் 80.12 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தில் ஐந்தாவது முறையாக ரூபாய் மதிப்பு 80ஐ தாண்டி இருக்கிறது.

Rupa

Next Post

சினிமா டிக்கெட் விலை ரூ.75 மட்டுமே.. நாளை ஒரு நாள் மட்டும் தான்.. எப்படி புக் செய்வது..?

Thu Sep 22 , 2022
தேசிய சினிமா தினத்தை கொண்டாடும் வகையில் நாளை ஒரு நாள் மட்டும் சினிமா டிக்கெட் விலை ரூ.75 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. செப்டம்பர் 23-ம் தேதி தேசிய சினிமா தினத்தைக் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கொண்டாடுகிறது. இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், நாட்டில் உள்ள 4000 திரையரங்குகளில் ரூ.75 என்ற விலையில் சினிமா டிக்கெட்களை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. முன்னதாக, தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16 அன்று கொண்டாட […]

You May Like