fbpx

பையா, மாமா என்று அழைத்த பெண்கள்!… கண்ணீர்விட்டு அழுத முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்!

மத்தியப்பிரதேசத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்று முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பெண்கள் மத்தியில் கண்ணீர் விட்டு அழுதார்.

மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜ 163 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல்வராக இருக்கும் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முதல்வராக மோகன்யாதவை பாஜ தேர்ந்தெடுத்தது. இதனை தொடர்ந்து கடந்த 11ம் தேதி இவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் முதல்வராக இருந்தபோது பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.

இந்நிலையில் விதிஷாவில் உள்ள ஹனுமன் கோயிலுக்கு முன்னாள் முதல்வர் சவுகான் சென்றார். அப்போது அவரை அங்கிருந்த பெண்கள் சூழ்ந்து கொண்டனர். பையா, மாமா என்று அழைத்து அவரை அழைத்து நெகிழ்ந்தனர். அவர் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று அங்கு திரண்ட பெண்கள் வலியுறுத்தினார்கள். அப்போது சிவராஜ் சிங்கின் கண்கள் கலங்கின. அவர்களிடம் நான் மத்தியப்பிரதேசத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்று சிவராஜ் சிங் சவுகான் உறுதியளித்தார்.

Kokila

Next Post

பலாத்கார வழக்கு..!! விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! 26 ஆண்டுகளுக்கு பின் நிரபராதி என தீர்ப்பு..!!

Sat Dec 16 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர், கடந்த 1997ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி, தனது மகளை லல்லா என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக 16ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், ஜனவரி 27ஆம் தேதி அதே கிராமத்தில் அந்த சிறுமி மீட்கப்பட்டார். பிறகு லல்லா, மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை கடந்த 2000இல் […]

You May Like