fbpx

சென்னைக்கு அருகில் சுற்றி பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா..? வீக் எண்ட் பிளான் ரெடி..!

வாரம் முழுவதும் வேலைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் விடுமுறை என்றால் அதனைப் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் அல்லவா? இவ்வளவு குறைந்த நாட்களில் எங்கே செல்வது என்று அனைவருக்குமே ஒரு சந்தேகம் இருக்கும். சிலர் அருகே இருக்கும் சென்னை கடற்கரைக்கே செல்வார்கள். சிலர் கடைவீதிகளுக்கு சென்று வேடிக்கைப் பார்த்துவிட்டு வருவார்கள். சிலர் மால் (Mall) சென்று வருவார்கள். ஆனால் அந்த இடங்கள் இல்லாமல் இரண்டு நாட்களில் வேறு எங்கெல்லாம் செல்லலாம் என்பதைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

தடா நீர்வீழ்ச்சி

சென்னையில் இருந்து 70 கிமீ தூரத்தில் அமைந்துள்ள தடா நீர்வீழ்ச்சி சென்னைவாசிகளுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு பிக்னிக் ஸ்பாட். காலையில் கிளம்பி சூலூர்பேட்டைக்கு மின்சார ரயிலில் ஏறினால் தடாவை அடைந்து விடலாம். நண்பர்கள், குழந்தைகள் குடும்பமாக போக உகந்த இடம். உங்கள் சொந்த கார் அல்லது பைக்கில் சென்றால் ஒரு லாங் டிரைவ் செய்த திருப்தியும் கிடைக்கும்.

மகாபலிபுரம்

7 ஆம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்தால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களுக்காக அறியப்பட்ட மகாபலிபுரம், சென்னைக்கு அருகில் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமான கடற்கரை கோயில், பஞ்ச ரதங்கள், கங்கையின் ஆலம்பாறை கோட்டை, புலி குகை, மகாபலிபுரம் கடற்கரை என்று பார்த்து வரலாம்.

இது ஒரு கோவில்கள் நிறைந்த இடம் என்பதால் அதிக இடங்களுக்கு செல்லலாம். மூன்று நாட்கள் விடுமுறை என்றால் இரண்டு நாட்கள் பயணம் செய்துவிட்டு மூன்றாம் நாள் நன்றாக ஓய்வெடுக்கலாம். அல்லது உங்களுக்கு ஓய்வெல்லாம் தேவையில்லை என்றால் தாராலமாக மகாபல்லிபுரம் செல்லலாம்.

முதல் நாள் காஞ்சிபுரத்தில் உள்ள காமாக்ஷி அம்மன் கோவில், ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், வரதராஜ் ஸ்வாமி கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் ஆகிய இடங்களுக்கு செல்லலாம். இரண்டாம் நாள் மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், சிற்பம் அருங்காட்சியகம், அர்ஜுனாஸ் பெனன்ஸ், குகை கோவில்கள், பஞ்ச ரதாஸ், கனேஷன் ரதா, கிருஷ்ணன் பட்டர்பால், மகாபல்லிபுரம் கடற்கரை ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.

புலிகாட் ஏரி பறவைகள் சரணாலயம்

சென்னையிலிருந்து சுமார் 1 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள புலிகாட் ஏரி பறவைகள் சரணாலயத்திற்கு புகழ் பெற்றது. அதோடு இந்திய அறிவியல் தளங்களில் முக்கியமான ஸ்ரீஹரிகோட்டா தீவும் இதன் அருகே தான் அமைந்துள்ளது. புலிகாட் இயற்கை அழகு, வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் கலவையை உங்களுக்கு பிரதிபலிக்கும். டச்சு கல்லறை, கோட்டை, காலனித்துவ கால தேவாலயங்கள், வெதுருப்பட்டு மற்றும் நெலப்பட்டு ஆகியவை இங்கு நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

பாண்டிச்சேரி

சென்னையிலிருந்து அதிகப்படியான இளைஞர்கள் செல்லும் வார இறுதி சுற்றுலாத் தலம் இந்த புதுச்சேரி நகரம் தான்! இந்திய மற்றும் பிரெஞ்சு கலாச்சாரத்தின் வசீகரிக்கும் கலவையான புதுவையில் கடற்கரை, பிரஞ்சு பாணி வீடுகள், துடிப்பான கஃபேக்கள், அமைதியான சூழல், பல்வேறு தேவாலயங்கள், கோவில்கள், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் என பொழுதைக் கழிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. சென்னையிலிருந்து 13௦ கிமீ அமைந்துள்ள இந்த நகரத்தை 2 அல்லது 3 மணி நேர பயண தூரத்தில் அடைந்து விடலாம்

வேலூர் கோட்டை

பழங்கால வரலாற்றிற்கு பெயர் பெற்ற வேலூர் ஒரு நாள் பயணத்திற்கு ஏற்ற இடமாகும். விஜயநகர கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட 16 ஆம் நூற்றாண்டு கோட்டையான வேலூர் கோட்டையை பார்வையிட ஒரு நாள் முழுக்க தேவைப்படும். சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால் கோட்டை வளாகத்திற்குள் ஒரு மசூதி, ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் ஒரு தேவாலயம் ஆகியவை ஒருங்கே உள்ளது. வேலூரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீபுரத்தில் உள்ள தங்கக் கோயிலையும் நீங்கள் கட்டாயம் பார்வையிட வேண்டும்.

Read more ; சட்டவிரோத சிவன் கோயிலை இடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!!

English Summary

If you have two days off after working all week, make the most of it. Here’s a look at where else to go in two days.

Next Post

பெரும் சோகம்!. தீவிபத்து வதந்தியால் ரயிலில் இருந்து கீழே குதித்த பயணிகள்!. எதிரே வந்த ரயில் மோதி பலர் பலி!.

Sat Jun 15 , 2024
Train Accident: ஜார்க்கண்டில் உள்ள குமண்டி ரயில் நிலையம் அருகே, ராஞ்சி-சசரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தீ விபத்து ஏற்பட்டதைக் கேள்விப்பட்டு தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது எதிரே வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் குமண்டி ரயில் நிலையம் அருகே, இரவு 8 மணி அளவில் ராஞ்சி-சசரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜினில் தீபிடித்ததாக பயணி ஒருவர் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, நபர் […]

You May Like