fbpx

நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியில்லை..!! யாருடன் கூட்டணி..? பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்..!!

நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி இல்லை எனவும், கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணிகளை உறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக பாமகவின் பொதுக்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி இல்லை எனவும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில நலன், தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், அதுகுறித்து முடிவு செய்யவும், கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கி பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Chella

Next Post

இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு மறுப்பு.! முகத்தை சிதைத்து, 20 வயது இளைஞன் படுகொலை.! நண்பன் செய்த கொடூரம்.!

Thu Feb 1 , 2024
புதுடெல்லியில் இயற்கைக்கு மாறான உடலுறவு வற்புறுத்தி, அதற்கு ஒத்துழைக்காத தனது நண்பனைக் கொன்றதாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜலோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளைஞரான, பிரமோத்குமார் சுக்லா. அவரது நண்பர் ராஜேஷ் குமார் பீகார் மாநிலம் மாதேபுராவைச் சேர்ந்தவர். இருவரும் கடந்த ஜனவரி 17ஆம் டெல்லியில் உள்ள மோரிகேட் டிடிஏ பூங்காவில் அமர்ந்து […]

You May Like