காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்துவதில் என்ன தவறு உள்ளது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள சி.பா. ஆதித்தனாரின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ’’குண்டு வீச்சு சம்பவமும் ,வன்முறை சம்பவங்களும் நடைபெறக்கூடாது, எந்த மாநிலமாக இருந்தாலும் சரி பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள். ஒரு மாநிலத்தில் சமய சார்பற்ற உணர்வு இருக்க வேண்டும். அது தவறினால் பலரை கோபமுறச் செய்கின்றது. எந்த வகையிலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் அமைதியோடு இருக்க வேண்டும் ’’ என்றார்
மேலும் அவர் கூறுகையில் புதுச்சேரி மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருப்பது போல்அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் உண்மையில்லை. என தெரிவித்தார்.
எவ்வளவு விமர்சனம் வந்தாலும் நான் மக்களுக்காக செயல்படுகின்றேன். அனவரும் சமம் என கூறம்போது நான் ஒரு இயக்கத்திற்கு மட்டும் எப்படி தடை சொல்வது. அமைதி பேரணிதான் அதை எதற்காக தடை விதிக்க வேண்டும். தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செல்வதில் என்ன தவறு உள்ளது என தெரிவித்தார். எனவே ஆர்எஸ்எஸ் சகோதரர்கள் மற்றவர்களைப் போல பேரணி செல்ல உரிமை உள்ளது என்றார்.