fbpx

’உடை மாற்ற வசதி இருக்காது’..!! ’எல்லாம் ஒரு மாதிரியா பார்ப்பாங்க’..!! பாடகி ராஜலட்சுமி வேதனை..!!

பிரபல நாட்டுப்புற ஜோடி பாடகர்களான செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி தம்பதியினர், சூப்பர் சிங்கர் சீனியர் 6 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலானார்கள். அந்த சீசனில் கானா பாடல்களை மட்டுமே பாடி செந்தில் கணேஷ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று வெற்றியாளர் ஆனார். அதனை தொடர்ந்து செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினருக்கு படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ராஜலக்ஷ்மி, ”பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு காட்டுப்பகுதிகளில் தான் மேடை அமைத்து இருப்பார்கள். அப்போது நமக்கு தனியாக அறை வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. மேடை அருகிலேயே ஓலை வைத்து அடைத்து ஒரு புடவையோ அல்லது எதையாவது சுற்றிக்கொண்டு தான் அங்கு உடை மாற்ற வேண்டும். கச்சேரி இரவு 2 மணிக்கு நடக்கும் என்பதால், பஸ்டாண்டில் நாம புல் மேக்கப் போட்டு போயிருக்கும் போது அங்கு பார்ப்பவர்களின் பார்வை வித்தியாசமாகத்தான் இருக்கும்.‘

மேலும், பல நேரங்களில் பஸ்களில் இருந்து கூட நம்மிடம் தவறாக நடக்க முயற்சிப்பார்கள். இதைப் பற்றி வெளியே சொன்னால் கூட ராத்திரி நேரத்தில் அந்த பொண்ணு எங்க போயிட்டு வந்திருக்குன்னு கூட யோசிக்க மாட்டாங்க. ஆனா, பிரச்சனை என்று வெளியே சொன்னால் உடனே எல்லோரும் சொல்றது அந்த நேரத்துல எதுக்கு அங்க இவ்வளவு மேக்கப் போட்டு போகணும் என்று கேள்வியாய் கேட்பாங்க” என்று கூறி தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

'அது இருக்குன்னு என்கிட்ட சொல்லவே இல்ல’..!! 'திடீரென நடந்த ஏற்பாடு’..!! படுக்கையறை காட்சி குறித்து வாணி போஜன் ஓபன் டாக்..!!

Sat Oct 28 , 2023
சீரியல் நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் நடித்தார். இதில் தெய்வமகள் […]

You May Like