Ajith Kumar : தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழக்கூடிய ‘தல’ என ரசிகர்கள் அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரின் பிறந்த தினம் இன்று. அவர் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திரையுலகினர், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அஜித்தை பற்றி…
1) 1971ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி ஆந்திராவில் பிறந்தார் நடிகர் அஜித். இவரது தந்தை பெயர் பி.சுப்பிரமணியன், தாயார் பெயர் மோகினி . இவருக்கு அருண்குமார், அனில்குமார் என்ற 2 சகோதரர்கள் உள்ளனர். நடிகர் அஜித்துக்கு 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகை ஷாலினியுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
2) 1993ஆம் ஆண்டு வெளிவந்த ‘அமராவதி’ திரைப்படம் மூலமாக நடிகராக கால்பதித்தார் அஜித்
3) ஆரம்ப காலங்களில் ராயல் என்பீல்டு இருசக்கர வாகன கம்பெனியில் மெக்கானிக்காக பணிபுரிந்தார்.
4) ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்வற்கு முன் தனது தாய், தந்தையிடம் ஆசி பெற்று செல்வார்
5) டீ, காஃபி, குளிர்பானம் என எந்த டிரிங்காக இருந்தாலும் வலது கையை மட்டும்தான் பயன்படுத்துவார் அஜித்
6) நடிகர் அஜித்துக்கு புகைப்படம் எடுப்பது ரொம்ப பிடிக்கம். இதனால், நிறைய கேமிராக்களை வாங்கும் ஆர்வம் அஜித்துக்கு அதிகம்
7) அஜித் ஒரு சிறந்த குக். அவருடன் பணிபுரியும் திரைப்பட கலைஞர்களுக்கு பிரியாணி செய்து கொடுத்து அசத்துவார்.
8) பைலட் லைசன்ஸ் வைத்துள்ள இந்திய நடிகர் அஜித் மட்டும்தான்
9) நடிகர் அஜித் இதுவரை 61 திரைப்படங்கள் நடித்துள்ளார். தற்போது 62வது படமான ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் நடந்து வருகிறது.
10) First Day First Show அன்று செல்போனை தொட மாட்டார் அஜித்
11) அமராவதி திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு நடிகர் விக்ரம்தான் டப்பிங் பேசினார். இதேபோன்று, ஆசை திரைப்படத்தில் அஜித்துக்கு பன்னீர்புஷ்பங்கள் படத்தின் நாயகன் சுரேஷ் குரல் கொடுத்தார்.
12) நடிகர் ரஜினி அளித்த ‘The Himalayan Masters’தான் அஜித்தின் Favourite புத்தகமாம். மேலும் ‘The Book Of Buddha’ புத்தகமும் அஜித்தின் ஆல் டைம் Favourite-யாக உள்ளது.
13) ரசிகர் மன்றத்தை கலைத்த ஒரே நடிகர் அஜித்குமார் மட்டும்தான்
14) சமையல், விளையாட்டு உள்ளிட்டவற்றிலும் அதிக ஆர்வம் காட்டும் அஜித், புதிய தொழில்நுட்பங்களை அறிவதில் அதீத ஆர்வம் கொண்டவர். துப்பாக்கி சுடுதலிலும் தடம் பதித்தவர். கோவையில் நடந்த போட்டியில் 6 பதக்கங்கள் வென்றுள்ளார்
15) இருசக்கர வாகனம் மற்றும் கார் பந்தயங்களிலும் உயிரை பொருட்படுத்தாது ஈடுபடுபவர். ஃபார்முலா ரேஸ் பந்தயங்களில் இந்தியாவின் மிகச்சிறந்த ஓட்டுநர்களில் 3ஆம் இடம் வரை முன்னேறிய பெருமை உடைய அஜித், ஃபார்முலா-2 ரேஸ் பந்தயத்திலும் பங்கேற்றுள்ளார்
16) தல, தளபதி இருவரும் சேர்ந்து நடித்து திரைப்படம் ‘ராஜாவின் பார்வையிலே’. இந்த படம் 1995ல் வெளியானது
Read More: UTS செயலியில் வந்தது அதிரடி மாற்றம்.. இத செய்யலன்னா உங்க டிக்கெட் கேன்சல்!!