fbpx

இளம் பெண்களுக்கு பணத்தாசைக் காட்டி.. வெளிநாட்டிற்கு கடத்தல்.!

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பசலுல்லா (53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலைக்கு என்று கூறி, குவைத்தில் உள்ள ஏஜென்டிடம் சில பெண்களை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார்.

ஜூன் 15ம் தேதி அன்று குவைத் செல்வதற்காக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 7 இளம்பெண்கள் கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர். அப்போது அவை போலியானது என்று தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து , அவர்கள் 7 பேரையும் போலீசிடம் ஒப்படைத்தனர் . மேலும் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர்களை பசலுல்லா என்பவர் வேலைக்கு என்று கூறி சுற்றுலாவிற்கான விசாவை மட்டுமே இவர்களுக்கு குடுத்துள்ளனர். கிராமப்புறங்களில் படிப்பறிவு இல்லாமல், வறுமையில் வாடும் இளம்பெண்களாக பார்த்து அணுகி, அதிக சம்பளம் கிடைக்கும் என்று கூறி இது போன்று பலரை குவைத்துக்கு கடத்தியது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தமிழக போலீசின் உதவியுடன் நேற்று கைது செய்து கேரள போலிசார் அழைத்து சென்றனர். மேலும் அவரிடம் கேரள போலிஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Rupa

Next Post

உணவு கொண்டுவர தாமதம்.. ஓட்டல் ஊழியருக்கு நேர்ந்த கதி.!

Fri Nov 11 , 2022
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் அன்சல் பிளாசா பகுதியில் ஒரு உணவகம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு மூன்று நண்பர்கள் அங்கு வந்து சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தனர். பிரியாணி கொண்டு வர தாமதம் ஆனது. இதனால், அந்த மூன்று பேரில் ஒருவர் ஆத்திரமடைந்து இங்கிருந்த உணவக ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் உணவக ஊழியருக்கு காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தினால் சிசிடிவி காட்சிகளின் […]

You May Like