தமிழக பா.ஜ.க.வில் களை எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளதாக கூறி உள்ள அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இது ஆரம்பம்தான் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’ பா.ஜ.க.வின் லட்சுமண ரேகையை மீறினால் நடவடிக்கை உறுதி.. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. தற்போது ஆரம்பக்கட்டம்தான். வரும் காலத்தில் இன்னும் பயங்கரமாக இருக்கும். இன்னும் அதிரடி நடவடிக்கைகள் தொடரும். பாரதிய ஜனகா கட்சி நாகரிகமான அரசியல் செய்து வருகின்றது. சூர்யா, சிவா தகாத முறையில் பேசியுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கை கேட்டிருக்கின்றேன். காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை. தவறு செய்தால் உறுதியாக நடவடிக்கை பாயும்’’ என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை பா.ஜ.க. வரவேற்கின்றது. முழுமையாக ஆதரிக்கின்றது. அதிமுகவுடன் கூட்டணி தொடரும். பா-ஜ.க. கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுமா என்பது தொடர்பான கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்பாக பா.ஜ.க. தொடரந்து குரல் எழுப்பி வருகின்றது. தமிழக பா.ஜ.க. பேருந்து போலதான். பழையவர்களைஇறக்கிவிட்டால் புதியவர்கள் ஏறமுடியும்.. என தெரிவித்தார்.