fbpx

“இன்றைக்கு வந்துவிட்டு நினைத்தை எல்லாம் பேச இது ஒன்றும் சினிமா அல்ல”..!! ”ரத்தம் சிந்தி ஆட்சிக்கு வந்துள்ளோம்”..!! விஜய்க்கு பதிலடி கொடுத்த அமைச்சர்..!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று உரையாற்றினார். அப்போது, “திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறினீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. எப்போதுதான் நீட் தேர்வை ரத்து செய்வீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் முக.ஸ்டாலின், “அதிமுகதான் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்ததாகவும், நீட் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும், மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது உறுதி” எனப் பதிலளித்தார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டிருந்த பதிவில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே… என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது.

கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால், தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், விஜய்யின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் சிவசங்கர், “நீட் தேர்வு ரத்து ஒன்றும், சினிமாவில் யாரோ எழுதும் பஞ்ச் டைலாக் பேசுவது போன்றது கிடையாது” என பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீட் தேர்வு என்பது இன்று புதிதாக வந்த விஷயம் இல்லை. நீட் என்பது மிகப்பெரிய போராட்டம். நீட் தேர்வு வந்தபோதே கலைஞர் தடுத்தி நிறுத்தினார்.

கலைஞருக்கு பிறகு அம்மையார் ஜெயலலிதாவும் தடுத்து நிறுத்தினார். அதன்பின் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த நீட் தேர்வானது நடைமுறைக்கு வந்தது. எனவே, அதில் இருந்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தொடர்ச்சியாக திமுக போராடி கொண்டிருக்கிறது. மத்திய அரசால் தான் இதனை ரத்து செய்ய முடியும். சட்டம் புரிந்தால் மட்டும் தான், நாட்டு நடைமுறை, ஆட்சி நடைமுறை புரிந்தால் தான், பேசவே முடியும்.

இது சினிமாவில் யாரோ எழுதிக் கொடுக்கும் வசனங்களை வாய்க்கு வந்தபடி பேசும் விஷயம் கிடையாது. திராவிட இயக்கத்தை குறித்து மற்றவர்கள் கிண்டல் செய்வதற்கு யோக்கியதை கிடையாது. இன்றைக்கு வந்துவிட்டு நினைத்தையெல்லாம் பேசிவிட்டு போக இது ஒன்றும் சினிமா அல்ல. இது அரசியல். மக்களுக்காக போராடியும், ரத்தம் சிந்திய காரணத்தால் ஆட்சியில் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Read More : ஐடி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் AI..!! இனி புது ஊழியர்களை வேலைக்கு எடுக்க மாட்டோம்..!! அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட Salesforce..!!

English Summary

This is politics. We are in power because of the blood we shed, despite fighting for the people.

Chella

Next Post

இன்ஸ்டாவில் பழக்கமான 16 வயது சிறுவன்..!! திடீரென மாயமான 10 வயது சிறுமி..!! காதல் ஜோடியை சேர்த்து வைத்த 3 நண்பர்கள்..!!

Sat Jan 11 , 2025
It was revealed that the girl had gone to find her Instagram friend. The 16-year-old boy's three friends were also helping to keep their relationship together.

You May Like