நடிகர் அஜித்தும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூம் இணைத்து வெளியான படம் தீனா. ஆனால் இதற்க்கு பின், இருவரும் இணையவில்லை. இதற்க்கு காரணம் என்ன என்று யாருக்கும் தெரியாது. தற்போது இதற்க்கான காரணம் வெளி வந்துள்ளது. ஆம், “தீனா திரைப்படத்திற்கு பிறகு அஜித்தும், ஏ.ஆர்.முருகதாஸூம் இணைய திட்டமிடப்பட்ட படம் தான் கஜினி. எஸ்.எஸ். சக்ரவர்த்தியின் தயாரிப்பில் உருவான அந்த படத்திற்கு மிரட்டல் என பெயர் வைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த பாடத்தின் ஷூட்டிங் மூன்று நாட்கள் நடந்த நிலையில், எஸ்.எஸ். சக்ரவர்த்திக்கும், அஜித்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால், அஜித் இந்த படத்தை வேறொரு தயாரிப்பாளரை வைத்து எடுக்கலாம் என ஏ.ஆர்.முருகதாஸிடம் கூறியுள்ளார். பின்னர் முருகதாஸ், அஜித் தன்னிடம் கூறியதை எல்லாம் சக்ரவர்த்தியிடம் சொல்லிவிட்டார். அப்போது, சக்ரவர்த்தி முருகதாஸிடம் நைசாக பேசி, தன் பக்கம் வைத்துக் கொண்டார். இதனால், ஏ.ஆர்.முருகதாஸ் மீது அஜித்திற்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப்படம் பாதியில் கைவிடப்பட்டது. பின்னர், இந்த கதையில் யாரும் நடிக்க சம்மதிக்கவில்லை. ஆனால், இறுதியில் சூர்யா இந்த படத்தில் நடிக்க ஒதுக்கொன்டத்தை அடுத்து, முருகதாஸின் கதை படமானது.