fbpx

குக் வித் கோமாளி ஷோ-வில் இருந்து விலக இதுதான் காரணம்..! உண்மையை உடைத்த பிரபலம்!!

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நாஞ்சில் விஜயன், அதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். இதுவரை 4 சீசன்கள் ஒளிபரப்பாகி மக்களுக்கு மத்தியில் பெரிய ஹிட் ஆன நிலையில், குக் வித் கோமாளி 5ம் சீசன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு சமீபத்தில் தொடங்கியது.

செஃப் வெங்கடேஷ் பட் வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜை நடுவராக விஜய் டிவி கொண்டு வந்திருக்கிறது. வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் இந்த சீசனில் நடுவராக வரவில்லை என்பதே ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் மற்றவர்கள் இருப்பதால் இந்த சீசன் எப்படி இருக்கப்போகிறது என ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பு பார்த்தனர். பழைய கோமாளிகள் உடன் புது கோமாளிகளும் பல பேர் ஷோவில் இணைந்து இருக்கின்றனர்.

இந்த சீசனில் சுஜிதா, பிரியங்கா, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், அக்‌ஷய் கமல், பூஜா வெங்கட், வசந்த் வாசி மற்றும் ஷாலினி ஜோயா உள்ளிட்ட போட்டியாளர்களாக கலந்துகொண்டு இருக்கிறார்கள்.கோமாளிகளாக புகழ், குரேஷி, ராமர், சுனிதா, வினோத், நாஞ்சில் விஜயன், ஷப்னம், அன்ஷிதா, கேமி உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த சீசனில் இருந்து நாஞ்சில் விஜயன் வெளியேறிருந்தார், அதோடு இந்த நிறுவனம் தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் நான் இனி கலந்துகொள்ள மாட்டேன் என கூறியிருந்தார். இந்நிலையில் ஷோவில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை தற்போது நாஞ்சில் விஜயன் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில்,  ”உண்மையில் எனக்கு அங்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை, நான் பேசும் பல விஷயங்களை எடிட் செய்து ஷோ ஒளிபரப்புகிறார்கள், இதுகுறித்து கேட்டாலும் சரியான பதில் இல்லை.

அடுத்த எபிசோடிற்கு அழைப்பார்கள் என இருந்தால் அதற்கும் பதில் இல்லை. என்ன ஆனது, நான் என்ன கண்டன்ட் தரவில்லையா என நிறைய முறை கேட்டும் தயாரிப்பு நிறுவனத்தில் பதில் இல்லை. எனவே தான் நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் என கூறியுள்ளார். 

Read more ; உங்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் ஈஸியா மாற்றலாம்!! எப்படி தெரியுமா…?

English Summary

Nanjil Vijayan has now revealed the reason behind his exit from the show.

Next Post

அமித்ஷா கொடுத்த வார்னிங்! தமிழிசை வீட்டுக்கே சென்று பேசிய அண்ணாமலை! பஞ்சாயத்து ஓவர்..

Fri Jun 14 , 2024
BJP State President Annamalai today held a surprise meeting with former Governor and BJP candidate for South Chennai Constituency Tamilisai Soundararajan.

You May Like