தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டால் 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
காய்ச்சல் மற்றும் தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.