fbpx

குட் நியூஸ்..! பி.இ., பட்டத்துடன் பி.எட்., முடித்தவர்கள் ஆசிரியராக பணி செய்யலாம்…! தமிழக அரசு அறிவிப்பு

பி.இ., பட்டத்துடன் பி.எட்., முடித்தவர்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிவதற்கு தகுதியானவர்கள் என உயா்கல்வித் துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.டெக்., எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு வேலைவாய்ப்பு வகையில் பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்குச் சமமானது. பி.எட்., (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக( இயற்பியல்) பணிபுரியலாம். அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உயா்கல்வித் துறைச் செயலா் வெளியிட்டுள்ள அரசாணையில்; கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.டெக்., எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு வேலைவாய்ப்பு வகையில் பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்குச் சமமானது. இதேபோல், பி.இ., படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் பி.எட்., (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக( இயற்பியல்) பணிபுரியலாம். அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்களாவர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Those who have completed B.Ed. with a B.E. degree can work as teachers.

Vignesh

Next Post

நோட்...! தொலைதூர கல்வி படிப்புகளில் சேர விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்...!

Thu Feb 27 , 2025
Tomorrow is the last day to apply for distance learning courses.

You May Like