இந்திய ரயில்வே வாரியம் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை மாற்றி அமைத்து சலுகையை குறிப்பிட்ட வகை டிக்கெட்டுகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளது. முன்பாக அனைத்து வகை மூத்தக்குடிமக்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அறிக்கைகளின் அடிப்படையில் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்தக்குடிமக்களுக்கு பொது மற்றும் ஸ்லீப்பர் வகுப்பிற்கு சலுகை வழங்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
மேலும், மூத்த குடிமக்களுக்கான மானியத்தை தக்க வைத்துக்கொண்டு, இந்த சலுகைகளின் விலையை குறைக்கும் யோசனை செய்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் கூறி வருகிறது. இருப்பினும், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ரயில்வே இதுவரை வெளியிடவில்லை. மத்திய அமைச்சர் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்யும் வசதியை ரயில்வேயானது மீண்டும் வழங்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது, “கடந்த 2019-20ஆம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு ரயில்வே 59,837 கோடி ரூபாய் மானியமாக வழங்கி உள்ளது. அதோடு ஸ்லிப்பர் மற்றும் 3-வது ஏசியில் பயணிக்கும் மூத்தக்குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்து உள்ளது” என்று கூறினார்.