டைம் பத்திரிகையின் 2023 ஆம் ஆண்டின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் பிரபல இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி மட்டுமே இடம்பிடித்துள்ளனர். எஸ்எஸ் ராஜமௌலிக்கு ஆலியா பட் சுயவிவரத்தை எழுதிய நிலையில், நடிகை தீபிகா படுகோன் ஷாருக்கானின் சுயவிவரத்தை எழுதினார்.
ஆலியாவின் பதிவில் “ராஜமௌலி தனது பார்வையாளர்களைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளார்.. தனது கதைகளில் சரியான துடிப்பு மற்றும் திருப்பங்களை எவ்வாறு அடிப்பது என்பது அவருக்குத் தெரியும்.. ராஜமௌலி ஒரு தலைசிறந்த கதைசொல்லி.. இந்தியாவின் மக்கள்தொகை, ரசனைகள் மற்றும் கலாச்சாரத்தில் பரந்த வேறுபாடு இருந்தபோதிலும், “ராஜமௌலி தனது திரைப்படங்கள் மூலம் நாட்டை ஒன்றிணைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்…
தீபிகா படுகோன் எழுதிய ஷாருக்கானின் சுயவிவர பதிவில் “ ஷாருக்கானை முதன்முதலில் சந்தித்ததை என்னால் மறக்கவே முடியாது. ஒரு சூட்கேஸ் மற்றும் கனவோடு பெங்களூரில் இருந்து மும்பை வந்தேன். அடுத்ததாக எனக்குத் தெரிந்த விஷயம், நான் அவருடைய வீட்டில் அமர்ந்திருந்தேன்! அவருடன் நடிக்க ஒரு கதாபாத்திரத்திற்காக நான் பரிசீலிக்கப்பட்டேன். அது 16 வருடங்கள் ஆகிவிட்டன, மேலும் “எங்கள் உறவின் சிறப்பு என்னவென்றால், நாம் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு, நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவை தான்..” என்று குறிப்பிட்டுள்ளார்..
டைம் பத்திரிகையின் இந்த பட்டியலில் ட்விட்டர் சி.இ.ஓ எலோன் மஸ்க், OpenAI இன் சாம் ஆல்ட்மேன், பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பாகிஸ்தான் அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஜெர்மன் அதிபர் ஒலாஃப் ஸ்கால்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்..
கடந்த ஆண்டு, கௌதம் அதானி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கருணா நுண்டி மற்றும் காஷ்மீர் ஆர்வலர் குர்ரம் பர்வேஸ் ஆகியோர் டைன் நாளிதழின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..