தனது பகுதியில் உள்ள மாணவர்களின் படிப்பிற்கு நான் உதவி செய்கிறேன் என திருவெற்றியூர் திமுக மேற்கு பகுதிச் திமுக செயலாளர் வை.ம.அருள்தாசன் உறுதி அளித்துள்ளார்.
சென்னை திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள காசிக்கோவில் குப்பத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சின்னம்மன் சியாமிளாதேவி ஆலய ஆவணி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், திருவெற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் வழக்கறிஞர் வை.ம.அருள்தாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நடன நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றினார்.
விழாவில் பேசிய வை.ம.அருள்தாசன், பொருளாதாரத்தில் நாம் முன்னேறி இருக்கிறோம் என்றால் ஆம். ஆனால், சமூக நிலை முன்னேறி உள்ளதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஏன் இல்லை என்றால்? நாம் பல தரப்பட்ட வாகனத்தில் சொல்கிறோம், தொழில் செய்கிறோம், நாம் படித்திருக்கிறோம், நாம் நிறையப் படித்துக் கொண்டிருக்கிறோம், அதையும் தாண்டி சமுதாயத்திற்கு உதவ வேண்டும். நம்முடைய கல்வி சமுதாயத்திற்கு ஒரு மாற்றத்தைத் தரக்கூடிய கல்வியாக இருக்க வேண்டும்.
நீங்கள் கற்கக்கூடிய கல்வி உங்கள் சமுதாயத்திற்கு மட்டுமல்லம்மால், அடுத்த சமூகத்துக்கும் பயன்பட வேண்டும். இங்கே இருக்கக்கூடிய மாணவர்கள், பெற்றோர்கள் ஒரு மாற்றத்தை ஏற்றுக் கொண்டு நம் பயணத்தைத் தொடங்க வேண்டும். நீங்கள் என்ன படிக்க வேண்டும் எனத் தெரியவில்லை என்றால் என்னிடம் வாருங்கள், நாங்கள் வழிகாட்டுகிறோம். நன்றாகப் படிக்கிறேன் எனக்கு வசதி இல்லை, எனது தந்தை கூலி வேலை செய்கிறார், நான் மேல் படிப்பு படிக்க விரும்புகிறேன், குரூப் தேர்வு எழுதுகிறேன், எனக்குப் பண வசதி இல்லை என்றால், நாங்கள் இருக்கிறோம். உங்கள் மேல் படிப்புக்கு நான் உதவுகிறேன், துணை நிற்பேன், 100 சதவீதம் உறுதியளிக்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவ மாணவிகள் கல்வி கற்க வேண்டும் என்று என்று புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டு இருக்கின்றார். அணைத்து மாணவர்களுக்கும் கல்வி என்ற உயர்ந்த குறிக்கோளோடு தமிழக முதல்வர் மாணவர்கள் பல திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
மாணவர்கள் கல்வி கற்றால், அந்த குடும்பம் உயரும். அந்த குடும்பம் உயர்ந்ததால், இந்த சமுதாயம் உயரும். இந்த சமுதாயம் உயர்ந்தால் இந்த நாடு உயரும். உங்களிடம் இருந்து பிரிக்க முடியாத, திருட முடியாத ஒரு சொத்து இருக்குமென்றால், அது கல்வி மட்டும்தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாற்றுத்திறனாளி சகோதரர் பிரபு அவர்கள் நடனம் ஆடினார். ஒரே ஒரு கால் தான் கிட்டத்தட்ட 15 நிமிடத்திற்கு மேல் ஆடினார். சக்கரம், பந்து உள்ளிட்ட நிறைய உபகரணங்கள் வைத்து ஆடிய அவருக்கு யாராச்சும் உதவி செய்திருக்கலாம். எந்த உதவியும் கேட்காமல், தனது திறமையை நிரூபிக்க என்னால் முடியும் என்று அவரே சென்று அந்த பொருட்களை எடுத்து வந்து நடனம் ஆடினார். என்னால் முடியும் என்று தன்னம்பிக்கையோடு நடனம் ஆடினார் என்று பேசினார்.
Read more ; செவ்வாய் கிரகத்தில் நகரம்.. இன்னும் 20 ஆண்டுகள் தான்..!! – அடித்து சொல்லும் எலான் மஸ்க்