fbpx

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை…! வானிலை மையம் கணிப்பு.‌‌..

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்.14 ஆம் தேதி ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகளில் பலத்தகாற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகள், ஒடிசா கடலோர பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

#Tngovt: 13 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ரூ.5,000 ...! விருப்பம் உள்ளவர்கள் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்‌.‌.‌.!

Sun Sep 11 , 2022
அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு மிதிவண்டி போட்டி நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்‌, தருமபுரி பிரிவு சார்பாக தமிழக முன்னாள்‌ முதல்வர்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ பிறந்த நாளான செப்டம்பர்‌ 15ம்‌ நாளினை சிறப்பிக்கும்‌ பொருட்டு மாவட்ட அளவிலான பேரறிஞர்‌ அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள்‌ 15.09.2022 அன்று காலை 10.00 மணிக்கு ஸ்ரீ விஜய்‌ வித்யாலயா ஆண்கள்‌மெட்ரிக்‌ பள்ளி பேருந்து […]

You May Like