fbpx

டிஎன்பிஎஸ்சி காலியிடங்கள்..!! எண்ணிக்கை உயர்வு..!! தேர்வர்கள் மகிழ்ச்சி..!! வெளியான முக்கிய தகவல்..!!

அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் காலியிடங்கள் மேலும் உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு துறைகளின் பணியிடங்களை நிரப்பி வருகின்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டது. அதில், 1,754 பணியிடங்களை நிரப்புவதற்க்கான தகவல் மட்டும் இடம் பெற்று இருந்தன. மேலும், குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுக்கு பணியிடங்களின் எண்ணிக்கை வெளியாகவில்லை. சர்ச்சைக்குள்ளான இந்த திட்ட அறிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி காலியிடங்கள்..!! எண்ணிக்கை உயர்வு..!! தேர்வர்கள் மகிழ்ச்சி..!! வெளியான முக்கிய தகவல்..!!

டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் இருந்து நேரடி நியமனத்திற்காக பெறப்படுகின்ற காலியிடங்களுக்கு மதிப்பீடுகளின் அடிப்படையில் போட்டித் தேர்வுகளுக்கான அட்டவனையை வெளியிட்டு வருகின்றது. தற்போது ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படுவது முதற்கட்டமாக தகவல்களை அளிக்கும் அட்டவணை தான் வெளியிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள 731 இடங்களுடன் சேர்த்து கூடுதலாக 2500 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 2500 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையங்களில் மேலும் இந்த எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வுக்கு ஜனவரி மாதத்தில் ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் தற்போது 9,870 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

100 நாள் வேலை திட்டம்..!! புதிய நடைமுறை அமல்..!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Tue Dec 27 , 2022
100 நாள் வேலை திட்டத்தில் மொபைல் அப்ளிகேஷன் மூலம் வருகை பதிவை கடைபிடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 32,05,98,542 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 15,44,25,837 பேர் வேலைக்கு செல்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 1,36,11,715 பேர் பதிவு […]

You May Like