கைலாசா நாட்டின் பிரதமராக நித்தியானந்தாவின் சிஷ்யை ரஞ்சிதா பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலியல், ஆள் கடத்தல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகளில் இரண்டு முறை கைது செய்யப்பட்டவர் தான் நித்தியானந்தா. இரண்டு முறையும் ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். நித்தியானந்தா குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்தபோதிலும், அதனை பற்றி கவலைக் கொள்ளாமல் தலைமறைவானார். அதன் பிறகு சில நாட்களில் தனி ஒரு நாட்டை தான் உருவாக்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கைலாசாவுக்கு என்று தனி பாஸ்போர்ட், தனி ரூபாய் நோட்டுகள் காயின்கள் எல்லாம் தயாரிக்கப்பட்ட்தாக செய்திகள் வந்தன. நித்தியானந்தா நேரலை நிகழ்ச்சிகள் மூலமாக தோன்றி அவரது பின் தொடர்பவர்களுக்கு சொற்பொழிவுகள் ஆற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார். இவரது கருத்துகள் இணையத்தில் மீம் டெம்பிளேட்டுகளாகவும் மாறியது. இதுவெல்லாம் ஒரு புறம் இருக்க, சில தினங்களுக்கு முன் ஐநா-வில் கைலாசா சார்பில் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தங்களது நாட்டின் சார்பில் சில கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
இந்நிலையில், கைலாசா நாட்டின் பிரதமராக நித்தியானந்தாவின் சிஷ்யை ரஞ்சிதா பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைலாசாவின் இணையதள பக்கத்தில் நடிகை ரஞ்சிதாவின் ஃபோட்டோ ஒன்றில் பகிரப்பட்டு, அதில் அவரது பெயர் நித்யானந்தா மாயி சுவாமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது இந்த பெயருக்கு கீழ் கைலாசாவின் பிரதமர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படமும், நடிகை ரஞ்சிதா பிரதமரானார் என்ற செய்தியும் இணையத்தில் காட்டு தீயாக பரவி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக நித்தியானந்தாவின் பெயர் சர்ச்சையில் சிக்கியபோது நடிகை ரஞ்சிதாவின் பெயரும் அடிபட்டது. நித்தியுடன் இவர் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருந்தன. அவற்றையெல்லாம் இருவருமே மறுத்த நிலையில், நித்தியானந்தா நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ரஞ்சிதா தொடர்ந்து பங்கேற்று தான் வந்தார். நீண்ட நாட்களாகவே நித்தியானந்தாவின் சிஷ்யையாகவே ரஞ்சிதா இருந்து வருவதால், அவருக்கு கைலாசா நாட்டின் பிரதமர் பதவியை வழங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கைலாசா என்ற நாடே உண்மையா? இல்லையா? என்று விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்நாட்டிற்கு பிரதமர் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.