சமூக வலைதள பதிவுகளை சரிபார்க்க PIBக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய விதிமுறைகள் வகுத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
கூகுள், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் முறைகேடான பல பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது என்பதும் இதனால் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. இந்தநிலையில், கூகுள், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ள பதிவுகளை சரிபார்க்க, PIB எனும் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது மத்திய தகவல் தொழிநுட்ப துறை அமைச்சகம். அதன்படி, அரசாங்கத்தைப் பற்றிய எந்தவொரு தவறான தகவலை PIB சுட்டிக்காட்டினால், அந்த தகவலை அந்நிறுவனங்கள் உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறையில் உள்ளது.
இந்த நடவடிக்கை ஊடகங்கள், அரசுக்கு ஆதரவாக இல்லாத செய்திகளைப் புகாரளிப்பதில் தடையாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஆனால், தணிக்கைக்கு பயப்பட வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உண்மைச் சரிபார்ப்பு என்பது தவறான தகவல்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும், மேலும் இது பேச்சு சுதந்திரத்தை பாதிக்காது. பாதுகாப்பான விதியானது, ஆன்லைனில் வெளியிடப்படும் உள்ளடக்கத்தின் மீதான சட்ட நடவடிக்கைகளில் இருந்து இடைத்தரகர்களைப் பாதுகாக்கிறது என கூறியுள்ளனர்.