வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம் செய்ய இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி 27.10.2023 முதல் 09.12.2023 வரை வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
மேலும் அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம். எனவே, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கும் சென்று படிவம் 6-ல் விண்ணப்பம் செய்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்திடுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.