International Translation Day: மொழிபெயர்ப்பு இல்லை என்றால் மொழிகள் வளர்ந்திருக்காது. கருத்து பரிமாற்றம், சர்வதேச நாடுகளுக்கு இடையில் நல்லுறவு மேம்பட்டிருக்காது. உலகில் பல்வேறு மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை உள்ளது. இவற்றை ஒருங்கிணைப்பதில் மொழிபெயர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
இதை முன்னிலைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலக மொழி பெயர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச மொழிபெயர்ப்புத் தினம் என்பது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. உலக அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சர்வதேச ராஜதந்திர பணிகளில் மொழிபெயர்ப்பு வல்லுனராக பணியாற்றும் மொழிபெயர்ப்பாளர்களை போற்றுவவதற்காகவே இந்த தினம் அங்கீகரிக்கப்படுகிறது
வடகிழக்கு இத்தாலியைச் சேர்ந்த செயின்ட் ஜெரோம், புதிய ஏற்பாட்டின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இருந்து பைபிளின் பெரும்பகுதியை லத்தீன் மொழியில் 5-ம் நூற்றாண்டில் மொழிபெயர்ப்பு செய்தார். மொழிபெயர்ப்பின் முன்னோடியாக அறியப்படும் ஜெரோம் 420 செப்டம்பர் 30-ல் இறந்தார். ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய நாடுகள் சபை ஜெரோம் நினைவை போற்றும் வகையில் சர்வதேச அளவில் மொழிபெயர்ப்பு போட்டியினை நடத்தி இந்நாளை கொண்டாடுகிறது.
Readmore: 4 நாட்களாக தொடர் கனமழை!. 170-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!. நேபாள பெருவெள்ளத்தின் சோகம்!