தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பச்சை மிளகாய் தற்போது கிலோ ரூ.60 முதல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. உதாரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு வெளி மாநிலங்களில் இருந்து 1,200 டன் தக்காளி வரவேண்டும். ஆனால், வெறும் 600 முதல் 700 டன் தக்காளி வரத்துதான் வருகிறது. இதனால் தக்காளி விலை மிக கடுமையாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு கிலோ தக்காளி சில்லறை விலையில் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் இதுவரை கணிசமான விலைக்கே போகாமல் இருந்த பச்சை மிளகாய் தற்போது 1 கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. காய்கறிகளின் கணிசமான விலை உயர்வு பொதுமக்களை மிகவும் தத்தளிக்க வைத்திருக்கிறது.
சென்னை கோயம்பேடு சந்தை நிலவரம்:
தக்காளி – ரூ.100
சின்ன வெங்காயம் – ரூ.80
உருளைகிழங்கு – ரூ.30
கேரட் – ரூ.70
பீன்ஸ் – ரூ.120
கத்திரி – ரூ.60
முருங்கை – ரூ.40
பட்டாணி – ரூ.180
பூண்டு – ரூ.160
இஞ்சி – ரூ.200
பச்சை மிளகாய் – ரூ.60
அவரை – ரூ.70
சென்னை கோயம்பேடு சந்தையிலேயே தக்காளி, பச்சை மிளகாய் இந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் நகரங்களிலும், புறநகர்களிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பொதுமக்களை பெரும் தவிப்புக்குள்ளாக்கி இருக்கிறது.