fbpx

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தனமாலயான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். மேலும், இந்த திருவிழாவில் 9 நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டு நாளை (டிசம்பர் 26) தேர் திருவிழா நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவார்கள். இந்த திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 20ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சென்னையில் மழை வெள்ளத்திற்கு பிறகு தொற்று பரவலா..? மாநகராட்சி ஆணையர் பரபரப்பு விளக்கம்..!!

Mon Dec 25 , 2023
சென்னையில் மழை வெள்ளத்திற்கு பிறகு எவ்வித தொற்று நோயும் பரவவில்லை என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”மழை வெள்ளத்திற்கு பிறகு ஏற்படும் நோய் பரவலை தடுப்பதற்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மேலும், கடந்த 23ஆம் தேதி வரை 1.38 லட்சம் மெட்ரிக் […]

You May Like