fbpx

ஓய்வூதியம் பெறும் நபர்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பெற நாளை கடைசி நாள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

ஓய்வூதியம் பெறும் நபர்கள் நாளைக்குள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சலக வங்கியும், ஓய்வூதியர்கள் நலத்துறை அமைச்சகமும் இணைந்து 2024 நவம்பர் 30 வரை நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC 3.0) இயக்கத்தை நாடு முழுவதும் உள்ள 800 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் நடத்தி வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான முக அங்கீகார மற்றும் கைவிரல் ரேகை பதிவு ஆகியவற்றின் மூலம் தொலைதூர பகுதிகளில் உள்ள ஓய்வூதியர்கள் உட்பட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அவர்கள் வசிக்கும் இடங்களிலோ, அருகில் உள்ள டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்களிலோ எளிமையாக இந்த வசதியை இதன் மூலம் பெற முடியும்.

இதன் ஒருபகுதியாக ஓய்வூதியம், ஓய்வூதியர்கள் நலத்துறை, இந்திய அஞ்சலக வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது. அனைத்து ஓய்வூதியர்களும் முக்கியமாக கிராமங்களில் உள்ள ஓய்வூதியர்கள் சிரமமின்றி தபால்காரர் மூலம் தங்களின் வீட்டிலேயோ அல்லது அருகில் உள்ள டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்களிலோ, முக அங்கீகாரம் அல்லது கைவிரல் ரேகை பதிவு மூலம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

இந்த இயக்கம், ஓய்வூதியர்கள் நலத்துறை, தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது என்றார். இந்திய அஞ்சலக வங்கி இல்லம் தேடி வங்கி சேவை மூலம் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தல் சேவையை வழங்கி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சேவைக்கு கட்டணமாக ரூபாய் 70 மட்டும் வசூலிக்கப்படுகிறது.

இந்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவையை பெறவிரும்பும் ஓய்வூதியர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம் என்றும் மேலும் https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது “Postinfo” செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவுசெய்யலாம்.

English Summary

Tomorrow is the last day for pensioners to obtain digital life certificates

Vignesh

Next Post

நாட்டில் உதயமாகும் 8 புதிய நகரங்கள்?. ரூ.8000 கோடி ஒதுக்கீடு!. ஏற்பாடுகள் தீவிரம்!. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அதிரடி!

Fri Nov 29 , 2024
8 new cities emerging in the country?. Allocation of Rs.8000 crore! Preparations are serious!. Ministry of Urban Development Action!

You May Like