fbpx

“சூப்பர் நியூஸ்” இனி தமிழக அரசு பேருந்தில் சுமை பெட்டி வாடகை திட்டம்‌…! போக்குவரத்து அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!

அரசு விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகளின்‌ சுமை பெட்டி வாடகை திட்டம்‌ விரைவில்‌ செயல்படுத்தப்படும்‌ போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ சிவசங்கர்‌ தெரிவித்துள்ளார்‌.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ வருவாயை பெருக்கும்‌ நோக்கத்தோடு பேருந்துகளில்‌ உள்ள உபயோகப்படுத்தப்‌ படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை, கடந்த 05.05.2022 அன்று போக்குவரத்து துறை மானியக்‌ கோரிக்கையின்‌ போது சட்டசபையில்‌ அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழகமானது தமிழகம்‌ முழுவதும்‌ குறைந்த இடைவெளியில்‌ குறுகிய நேரத்தில்‌ பேருந்துகளை இயக்குகிறது. தமிழகத்தின்‌ ஒவ்வொரு பகுதியிலும்‌ விளைவிக்கும்‌ அல்லது உற்பத்தி செய்யும்‌ பிரசித்தி பெற்ற பொருட்கள்‌ (உதாரணமாக திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன்‌, கோவில்பட்டி கடலை மிட்டாய்‌, திண்டுக்கல்‌ சிறு வாழை, நாகர்கோயில்‌ நேந்திரம்‌ சிப்ஸ்‌ உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும்‌) பிற ஊர்களுக்கு வியாபாரம்‌ செய்திட ஏதுவாக தற்போது லாரி மற்றும்‌ பார்சல்‌ சர்வீஸ்கள்‌ மூலம்‌ எடுத்துச்‌ செல்லப்படுகிறது.

இந்நிலையில்‌, குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில்‌ விரைவாக அனுப்பிட ஏதுவாக, பொதுமக்கள்‌, விவசாயிகள்‌, வணிகர்கள்‌ மற்றும்‌ அவர்‌ தம்‌ முகவர்கள்‌ தினசரி பொருட்களை ஒரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும்‌ வகையில்‌, ஒரு மாதம்‌ முழுவதும்‌ பேருந்தில்‌ உள்ள சுமை பெட்டியை மாத வாடகை அல்லது தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக்‌ கொள்ள இத்திட்டம்‌ 03/08/2022 முதல்‌ செயல்படுத்தப்பட உள்ளது. இதனை, சிறு, பெரு வியாபாரிகள்‌, வணிகர்கள்‌, முகவர்கள்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ள அருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப்‌ போக்குகரத்து கழக கிளை மேலாளரிடம்‌ விண்ணப்பிக்கவும்‌. பொது மக்கள்‌ திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில்‌ தங்களது சுமைகளை அரசு விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழக பேருந்துகளில்‌ அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்‌ளது.

எனவே, இது‌ தொடர்பான ஆலோசனைகளைப்‌ பெற கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்‌.

Also Read: இதை செய்ய தவறினால் ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 அளவிற்கு மின் கட்டணம் கூடுதலாக செலுத்த நேரிடும்…!

Vignesh

Next Post

அதிகரிக்கும் கொரோனா... வரும் ஜூலை 24-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு...! மீறினால் நடவடிக்கை

Thu Jul 14 , 2022
மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா வழக்குகள் கடுமையாக அதிகரித்து வருவதால், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவை மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இது குறித்து கல்வித்துறை ஆணையர் எச்.கியான் பிரகாஷ் தனது உத்தரவில்; மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சோதனை நேர்மறை விகிதம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எனவே, 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு […]

You May Like