fbpx

தமிழகத்தில் மீண்டும் பேருந்துகள் ஓடாது.? தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.! விபரம் என்ன.!

தமிழக அரசின் போக்குவரத்து துறை தொழிற்சங்கங்கள் பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து மாநிலம் தழுவிய பேருந்துகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.

இதனை ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள் கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம். பண்டிகை காலம் முடிந்ததும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணலாம் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்ட அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். இந்நிலையில் அரசு மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. இதன் பிறகு பிப்ரவரி 21ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது . அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தால் மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

Next Post

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு..! "உடல் சிதறி பலியான '26' பேர்.." நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் தீவிரவாத தாக்குதல்.!

Wed Feb 7 , 2024
பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் இரு வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாடு இப்போது தேர்தலுக்காக தயாராகி வருகிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருக்கும் போது கடுமையான ராணுவ நடவடிக்கைகளின் மூலம் தீவிரவாதிகளை நாட்டில் இருந்து வெளியேற்றினார். இதனால் பாகிஸ்தானில் பெரும் அளவு தீவிரவாத நடவடிக்கைகள் […]

You May Like