ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் பாம்பை விட்டு கடிக்க விடும் வினோத திருவிழாவை கொண்டாடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. நமக்கு பாம்பை கண்டாலே தானாகவே நடுக்கம் கொடுக்க ஆரம்பித்து விடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பாம்பிற்கு பயப்படாதவர்களே இருக்க முடியாது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள சங்கர்தா கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் குலதெய்வங்களாக நாகப்பாம்பை வைத்து வித்தியாசமான முறையில் திருவிழா என்ற பெயரில் கடந்த 100 ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். இந்த மக்கள் தங்கள் குலதெய்வமாக நாகங்களின் கடவுளாக கருதும் மானசா தேவியை வழிபடுகின்றனர். மானசா தேவியை சாந்தப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான முறையில் திருவிழா நடத்துகின்றனர்.
இத்திருவிழாவில் பாம்பை வைத்து ரத்தத்தின் மீது அமர்ந்த பாம்பை தங்கள் மீது கடிக்க வைக்கின்றனர். இதுகுறித்து திருவிழா பற்றி பங்கேற்பவர்களிடம் கேட்ட போது, இந்நிகழ்ச்சி மூலம் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மனவலிமை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பூஜை நேரத்தில் ரதத்தில் பாம்பாட்டிகள் இருந்தால் பாம்பின் விஷத்தால் அவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர். மேலும் இதுமாதிரியான மூட நம்பிக்கை செயல்களை யாரும் முயற்சிக்க வேண்டாம் என கூறப்படுகிறது.