fbpx

நேரடியாக மத்திய அரசு மரியாதை…! அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகை…!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக நேற்று காலமானார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தேமுதிக கட்சியினர், பொதுமக்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வந்தனர்.

விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை தீவுத்திடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இங்கு உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். பின்னர், இறுதிச் சடங்குகளுக்காக உடலை கோயம்பேடு அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு அரசு மரியாதையோடு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் இன்று மத்திய அரசு சார்பில் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விஜயகாந்த் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்த உள்ளார். விஜயகாந்த் மறைவுக்கு நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

Vignesh

Next Post

தீவுத்திடலில் கேப்டன்...! அலைமோதும் கூட்டம்... பொதுமக்கள் அமர 1000-க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைப்பு....!

Fri Dec 29 , 2023
விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு பொது மக்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை தீவுத்திடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி […]

You May Like