NASA: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்துவரும் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-10 பணியின் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக NASA தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு 10 நாட்கள் பயணமாக சென்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், ஒன்பது மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ளார். இந்நிலையில், இப்படி நீண்ட காலமாக விண்வெளியில் தங்கியிருப்பதால், அறிவியலாளர்கள் கருத்துப்படி, அவரது உடலில் பல உடல் நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்க அதிபரான ட்ரம்ப், சுனிதா வில்லியம்ஸை மீட்கும் பொறுப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கிடம் ஒப்படைத்தார். அதன்படி, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், நாசா இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ 10 என்ற மீட்பு விண்கலத்தை அனுப்பி சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோரை மீட்க துரித நடவடிக்கை எடுத்தனர். இன்று இந்த ராக்கெட் புறப்பட இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டு நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என நாசா தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு வந்து சேர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Readmore: எக்ஸ்சேஞ்ச் செய்யப்படும் பழைய போன்கள்!. அதை என்ன செய்கிறார்கள் தெரியுமா?. ஆச்சரிய தகவல்கள்!.