மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபித்தார்..
மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், உத்தவ் அரசுக்கு எதிராக சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்களே திரண்டதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. சிவசேனாவின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக களமிறங்கினர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே, சட்டப்பேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை திட்டமிட்டபடி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.
ஆனால், அதை சந்திக்காமலேயே உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.. இதையடுத்து கடந்த 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.. தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார்.. நேற்று மதியம் வரை தேவேந்திர பட்னாவிஸ் தான் முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதிரடி திருப்பமாக ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார்..
இந்நிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபித்தார்.. பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 64 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.. நேற்று தேர்வான புதிய சபாநாயகர் ராகுல் நவேர்கர் தலைமையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.. ஒவ்வொரு உறுப்பினரையும் நிற்கவைத்து, அவரது வாக்கை சட்டப்பேரவை அதிகாரிகள் பதிவு செய்தனர்.. இதில் உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ.வான சந்தோஷ் பங்கார் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக வாக்களித்தார்..