தமிழ் சினிமாவை கலக்கியவர் என்றால் அது முரளி தான். தனது எதார்த்தமான நடிப்பால் பலரின் கவனத்தை ஈர்த்தவர். ஹீரோ என்றால் பளிச்சென்று முகம், பளபளக்கும் சட்டை, என்ட்ரி கொடுக்கும் பொழுதே 10 பேரை தூக்கி அடித்து வீசிவிட்டு தான் வர வேண்டும் என்று அப்போதைய சினிமா இருந்தது. முகத்தில் எப்போதும் ஒரு தனிப்பட்ட சோகம், இயல்பான நடிப்பு, பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் ஒரு முகம், காதல், ஏக்கம், காதலின் தவிப்பு, காதலிக்கு அடங்கி போவது என ஹீரோவிலேயே இவர் வித்தியாசம். அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள முரளி, பூவிலங்கு என்னும் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர், தமிழ் சினிமாவில் சகோதரர், ஹீரோ, காதல் மன்னன் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். திரை உலகின் உச்சம் தொட்ட நடிகர் முரளி, 2006ம் ஆண்டிற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து விட்டார். பின்னர், நீண்ட வருடங்களுக்குப் பின் தன் மகன் அதர்வா நடிப்பில் வெளிவந்த பாணா காத்தாடி படத்தில் கேமியோ ரோலில் கடைசியாக நடித்திருந்தார். தமிழக அரசின் சிறந்த நடிகர் என்ற பட்டதை இவர் கடல் பூக்கள் என்ற படத்தில் நடித்ததற்காக பெற்றார்.
உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு இவர் காலமானார். இப்போது இவரது மகன் அத்ர்வாவிர்க்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் முரளியை பற்றி பாவா லட்சுமணன் சில தகவல்களை தற்போது பகிர்ந்துள்ளார். மிகவும் நல்ல மனிதரான முரளி, பழகுவதில் மிகவும் தங்கமானவர். ஆனால் அவர் பீக்கில் இருக்கும் போது சில பல விமர்சனங்கள் அவரைப் பற்றி வந்தது. அதில் எதுவும் பொய் இல்லை, அனைத்தும் உண்மை தான். விமர்சனங்களுக்கு ஏற்ப அவரும் அப்படித்தான் நடந்து கொண்டார். அதாவது பெண்களுடன் கிசுகிசுக்கப்பட்டார், அதுவும் உண்மை தான். சில கெட்ட பழக்கங்களும் இருந்தன. இதுதான் அவருக்கு இருந்த பிரச்சனை. ஆனால் நாளடைவில் அதை திருத்தியும் கொண்டார் முரளி என பாவா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.